Homeமலேசியாதடுப்பூசி மையத்தின் 204 ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று !

தடுப்பூசி மையத்தின் 204 ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று !

ஷா ஆலாம் | 13/7/2021 :-

கடந்த 10/7/2021 நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் ஷா ஆலாம் IDCC மாநாட்டு மையத்தில் இயங்கி வரும் தடுப்பூசி மையத்தின் ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அது இன்று ஒரு நாள் (13/7/2021) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் வெளியிட்ட தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன், கடந்த 9ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரையில் இம்மையத்திற்குத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த அனைவரும் 10 நாட்களுக்கு சுயத் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இங்கு பணியாற்றும் 453 ஊழியர்களில் 88 விழுக்காட்டினர் , அதாவது 400 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.

இங்குள்ள தொண்டூழியர்களுக்கு தொற்றுப் பரவி இருக்கலாம் எனத் தெரிய வந்தவுடன் அனைவருக்கும் பெரிய அளவில் பரிசோதனை மேற்கொள்ளத் தாம் பணித்ததாக அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more