Homeமலேசியாஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களின் நிரந்தர அரசுப் பணி குறித்து அமைச்சரவையில் பேசப்படும் ! பிரதமர் தகவல்

ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களின் நிரந்தர அரசுப் பணி குறித்து அமைச்சரவையில் பேசப்படும் ! பிரதமர் தகவல்

கிள்ளான் | 13/7/2021 :-

ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவப் பணியாளர்களின் வேலை நிரந்தரமாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை குறித்து அடுத்து வரும் அமச்சரவைக் கூட்டத்தில் பேசப்படும் எனப் பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து தொடர்புடைய பல கோணங்களில் ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அரசுக்கு ஏற்படும் செலவுகள், பொருளாதார்ச் சிக்கல் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட்டு கலந்தாலோசிக்கப்படும்.

ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவப் பணியாளர்களின் வேலை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையை அமைச்சரவைக்குத் தரும். ஏறத்தாழ ரி.ம. 2 பில்லியன் மதிப்பிலான செலவை அது கொண்டிருக்கும். சில நடைமுறை சிக்கல்களும் அவ்விவகாரம் கொண்டிர்க்கும். இருந்தாலும் இதனை எவ்வாறு சுமூகமாக தீர்வு காண முடியும் என நாம் முயற்சிக்க வேண்டும்.

கில்ளானில் உள்ள தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த போது பிரதமர் அவ்வாறு கூறினார்.

இவ்வாரம் புதன் கிழமை அன்று நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவப் பணியாளர்களின் வேலை நிரந்தரமாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை குறித்து அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதற்குத் தமது உடன்படும் என மலேசிய மருத்துவச் சங்கம் தெரிவித்தது.

அச்சங்கத்தின் பயிற்சி மருத்துவர், மருத்துவ அதிகாரி, மருத்துவ வல்லுநர் பிரிவின் தலைவர் டாக்டர் விஜய் கணேசம் தெரிவிக்கயில், கடந்த வாரம் சுகாதார அமைச்சருடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டு விட்டதாகவும் இவ்விவகாரம் அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்படும் எனவும் தமது தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து நிரந்தரத் தீர்வு வேண்டும் எனவும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

மருத்துவ அதிகாரிகள், தாதியர்கள், மருத்துவ உதவி அதிகாரி ஆகியோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபடும் எனவும் அதிலும் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், பொதுச் சேவைத் துறையிடம் இது குறித்து விரைந்து சுகாதார அமைச்சு கலந்து பேச இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more