Homeமலேசியாபாஸ் கட்சி ஆதரவாளர் பிரிவின் மகளிர் அணித் தலைவி குமுதா இராமன் இயற்கை எய்தினார் !

பாஸ் கட்சி ஆதரவாளர் பிரிவின் மகளிர் அணித் தலைவி குமுதா இராமன் இயற்கை எய்தினார் !

கோலாலம்பூர் | 13/7/2021 :-

மகளிர், குடும்ப, சமூக நலத் துறை துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரியும் பாஸ் கட்சி ஆதரவாளர் பிரிவின் மகளிர் அணி தலைவியுமான குமாரி குமுதா இராமன் இன்று இயற்கை எய்தினார்.

புத்ராஜெயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று பிற்பகலில் இறைவனடி சேர்ந்தார்.

அவரின் குடும்பத்திற்கு பாஸ் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.

கடந்த 12ஆம் – 13ஆம் பொதுத் தேர்தலில் தீராம் சட்டமன்றத் தொகுதியிலும் 14ஆம் பொதுத் தேர்தலில் ஜோகூர் ஜெயா சட்டமன்றாத் தொகுதியிலும் குமுதா போட்டியிட்டார்.

பாஸ் கட்சியைப் பிரதிநிதித்து மக்களின் ஒற்றுமை குறித்து சேவையாற்றி வந்தார்.

அவரது இறப்பு பாஸ் கட்சிக்குப் பெரும் இழப்பு என அது தெரிவித்தது. குமுதாவின் இழப்பை எதிர்கொள்ள அவரது குடும்பத்தாருக்கு இறைவன் துணாஇ நிற்பார் என பாஸ் கட்சி வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

spot_img

latest articles

explore more