Homeமலேசியாகோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பயன்படுத்தக் கூடிய காற்றோட்ட - உட்காற்றுத் தர வழிகாட்டியை மனிதவள அமைச்சு...

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பயன்படுத்தக் கூடிய காற்றோட்ட – உட்காற்றுத் தர வழிகாட்டியை மனிதவள அமைச்சு உருவாக்கியுள்ளது !

புத்ராஜெயா | 13/7/2021 :-

வேலையிடப் பாதுகாப்புத் துறையின் வழி மனிதவள அமைச்சு கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பயன்படுத்தக் கூடிய காற்றோட்ட – உட்காற்றுத் தர வழிகாட்டி ஒன்றினை உருவாக்கியுள்ளது.

அந்த வழிகாட்டியும் படத் தகவலும் கடந்த 7ஆம் நாள் தற்காப்பு அமைச்சின் ஒப்புதலும் அதற்கு மறுநாள் நடந்த தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் அங்கீகாரமும் பெற்றுள்ளது என மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

காற்று வழி கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க வேலையிடம், சுகாதார வசதிகள், குடியிருப்பு, பொது இடங்கள் ஆகியவற்றில் காற்றின் தரத்தையும் காற்றோட்டத்தையும் மேம்படுத்தும் வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளதை பொது மக்களுக்குத் தெரிவிக்க அந்தச் செய்தி அறிக்கையை மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ளது.

குளிரூட்டியைப் பயன்படுத்தும் இடங்களுக்கு 4 முக்கியமான முறைகள் அந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சு அதன் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காற்று வழி கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்க இந்த முறைகளைக் கையாள முன்மொழியப்படுகிறது.

மேலும், தேசியப் பாதுகாப்பு மன்றம் வெளியிட்டுள்ள மிக அண்மைய எஸ்.ஓ.பி.யும் இதரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளும் காற்றோட்ட – உட்காற்றுத் தர வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளுடன் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

latest articles

explore more