Homeஅரசியல்அரசு இல்லத்திலேயே இருக்கச் சொன்னதா அல்லது சுற்றுலா தங்குமில்லத்திற்குச் செல்லச் சொன்னதா ? – நஜிப்...

அரசு இல்லத்திலேயே இருக்கச் சொன்னதா அல்லது சுற்றுலா தங்குமில்லத்திற்குச் செல்லச் சொன்னதா ? – நஜிப் கேள்வி

கோலாலம்பூர் | 24/7/2021 :-

பத்து பகாட் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் ரஷிட் ஹஸ்னோன் அண்மையில் தங்குமில்லத்தில் (Homestay) விருந்தொன்றில் கலந்து கொண்டு எஸ்.ஓ.பி,யை மீறிய விவகாரம் குறித்து அம்னோவின் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக் கருத்துரைத்துள்ளார்.

முகக்கவரி அணியாதது மட்டும் எஸ்.ஓ.பி. மீறல் அல்ல. ஏன் அந்த பிகேஆர்-இன் முன்னாள் உறுப்பினர் தனது மனைவி மகளுடன் தங்குமில்லம் (Homestay) சென்றனர் எனவும் மற்றவர்கள் இது போன்று செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் இவர்களுக்கு அந்தத் தடை இல்லையா எனவும் நஜிப் ரசாக் எழுப்பியுள்ளார்.

நேற்று முகம்மட் ரஷிட் தனது குடும்பத்தாருடன் ஒரு தங்குமில்லத்தில் (Homestay) விருந்தொன்றில் கலந்து கொண்ட நிழற்படம் சமூக ஊடகங்களில் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டது.

முகம்மட் ரஷிட் தியாகத் திருநாளுக்காக அங்கு சென்றதாக அவரது இரகசியச் செயலாளர் முகம்மட் ஸைஹான் முகம்மட் ஸைனால் தெரிவித்தார்.

அந்நிகழ்வு அதிகாலை 3.00 மணிக்கு நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நிழற்படத்தைப் பகிர்ந்த முகநூல் கணக்கின் உரிமையாளர் முதலில் இதற்கு முன்னர் எஸ்.ஓ.பி.யை மீறிய அம்னோவின் உதவித் தலைவர் முகம்மட் காலிட் நோர்டினிடம் கேட்க வேண்டும் என முகம்மட் ஸைஹான் தெரிவித்தார்.

முன்னதாக, கோவிட்-19 பரவலைத் தடுக்க அரசு வெளியிட்டிருந்த எஸ்.ஓ.பி.யைக் குறிப்பிட்டு குழப்பமடைவதாக கிண்டல் செய்வது போன்று தகவல் வெளியிட்டிருந்தார்.

“சுற்றுலா தங்குமில்லங்களில் தங்க அனுமதிக்கப்பட்டு விட்டதா ?”

“ஒரே குழப்பமாக உள்ளது. அரசு இல்லத்திலேயே இருக்கச் சொன்னதா அல்லது சுற்றுலா தங்குமில்லத்திற்குச் செல்லச் சொன்னதா ?” என நஜிப் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

spot_img

latest articles

explore more