புத்ராஜெயா | 12/8/2021 :-
கெடா மாநில சுற்றுலாத் துறையை உட்படுத்திய திட்டக் குத்தகை விவகாரத்தில் அம்மாநில முதல்வர் முகம்மட் சனுசி முகம்மட் நோர் தமது தகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இருப்பதாக பிகேஆர் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகாரளித்துள்ளார்.
சுங்கை சிப்புட் கிளையின் உறுப்பினரான இந்திராணி செல்வக்குமார் இவ்விவகாரம் தொடர்பில் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் அப்புகாரைக் கொடுத்தார்.
ரி.ம. 1 பில்லியன் மதிப்பிலான அத்திட்டக் குத்தகையைத் திவாலான ஒருவர் தோற்றுவித்து அதன் இயக்குநராக இருப்பவருக்கு சனுசி வழங்கி இருப்பதற்கு ஆதாரங்கல் தமது வசம் இருப்பதாக இந்திராணி கூறினார்.
முன்னதாக அந்த நபர் மலேசிய செக்யூசிட்டி கமிஷனில் குற்றஞ்சாட்டப் பட்டவர் என இந்தராணி குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு எப்படி ரி.ம. 1 பில்லியன் மதிப்பிலானத் திட்டக் குத்தகையை வழங்க முடியும் ? இதன் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திராணி கேட்டுக் கொண்டார்.


