Homeமலேசியாகோவிட்-19 நேர்வுகள் அதிகரிப்பால் காராக் அரசு கிளினிக்கிற்கு ஆம்புலன்ஸ் தேவை ! – காமாட்சி துரைராஜூ

கோவிட்-19 நேர்வுகள் அதிகரிப்பால் காராக் அரசு கிளினிக்கிற்கு ஆம்புலன்ஸ் தேவை ! – காமாட்சி துரைராஜூ

காராக் | 14/8/2021

இவ்வட்டாரத்தில் கோவிட்-19 நேர்வுகள் அதிகரித்துள்ளதால் காராக் அரசு கிளினிக்கிற்கு ஆம்புலன்ஸ் தேவை என சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளார்.

முன்னதாக, காராக் அரசு கிளினிக்கில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் இருந்ததாகவும் அதில் ஆர் ஆம்புலன்ஸ் பழுதடைந்திருப்பதாக காமாட்சி தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

கோவிட்-19 நோயாளிகளைப் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவைக்கானத் தேவை தற்போது அதிகரித்திருப்பதால் இன்னொரு ஆம்புலன்ஸ் தேவை என அவர் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

spot_img

latest articles

explore more