Homeசிறப்புச் செய்திகள்தீமைகள் அகன்று நன்மைகள் பெருகட்டும்; அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்! – எஸ். செந்தில் குமார்...

தீமைகள் அகன்று நன்மைகள் பெருகட்டும்; அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்! – எஸ். செந்தில் குமார் தீபாவளி வாழ்த்து

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, அஞ்சப்பர் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். செந்தில் குமார், அனைத்து மக்களுக்கும் தனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி என்பது தீமையை வென்று நன்மை நிலைபெறுவதையும், இருளை அகற்றி ஒளி பிறப்பதையும் உணர்த்தும் உன்னதமான திருநாளாகும். இத்தகைய நன்னாளில் ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, மகிழ்ச்சியும் மனநிறைவும் பெருக வேண்டும்.

குடும்ப உறவுகளுடன் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டு, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தத் தீபாவளி அனைவருக்கும் புதிய தொடக்கமாகவும், வளமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையாகவும் அமையட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

spot_img

latest articles

explore more