Homeஅரசியல்சிகாம்புட்டில் உணவுக் கூடைகள் விநியோகம் ! முழு வீச்சில் ஹன்னா இயோ

சிகாம்புட்டில் உணவுக் கூடைகள் விநியோகம் ! முழு வீச்சில் ஹன்னா இயோ

சிகாம்பூட் | 14/8/2021 :-

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கும் நடவடிக்கையில் முழு வீச்சாக இறங்கியிருக்கிறார் சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ.

கடந்த ஒரு வாரத்தில் 3,000க்கும் மேற்பட்ட உணவுக் கூடைகள் தமது நாடாளுமன்றத் தொகுதிக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆகக் கடைசியாக ஶ்ரீ பண்டார் அடுக்ககம், மேவா இந்தான் அடுக்ககம், புத்ரா மஜெஸ்டிக் அடுக்ககம், கே எல் எச் கட்டடம் ஆகிய இடங்களில் உணவுக் கூடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இங்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களுடன் ஒரு தட்டு முட்டைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பகுதி சிலரின் நன்கொடையால் வழங்கப்படுவதாகும் அந்த உணவுக் கூடைகளை தமது அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தமது முகநூலில் ஹன்னா இயோ பதிவிட்டார்.

spot_img

latest articles

explore more