கோலாலம்பூர் | 17/8/2021 :-
இன்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மாமன்னரைச் சந்திக்க இருக்கின்ற நிலையில், அவர்கள் அனைவரையும் மாமன்னர் ஒரே நேரத்தில் சந்திக்கவிருப்பதாக அரண்மனை சார்ந்த நம்பத்தகுந்த வட்டத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
அவ்வாறானச் சந்திப்பின்போது யார் அடுத்தப் பிரதமர் என்பது குறித்து அறிவிப்பு வழங்கப்படுமா எனப் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை மாலை 4.00 மணிக்குள் யார் அடுத்தப் பிரதமர் என்பதைத் தேர்தெடுத்து அதனைத் தெரிவித்து கடிதம் ஒன்றூ அரண்மனைக்கு அனுப்ப ஆணையிடப்பட்டுள்ளது.


