கோலாலம்பூர் | 17/8/2021 :-
மகியாதீன் பிரமதர் பதவியைத் துறந்திருந்தாலும் அரசியலில் இருந்து இன்னும் முழுதாய் ஒதுங்கிவிடவில்லை.
பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மீண்டும் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகளை மறுக்கவில்லை.
இது குறித்து அவரிடம் பதவி விலகலுக்குப் பின்னர் வினவியபோது, “பார்க்கலாம்” என பதிலளித்துள்ளார்.
தமக்குப் பெரும்பான்மை இருந்ததாகவும், இருப்பினும் தாம் பதவி விலகியதாகவும் தெரிவித்தார்.
அதே சமயம். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகத் தெரிவித்தாலும் அதனை யாரும் நிரூபிக்க வில்லை என அவர் குறிப்பிட்டார்.
அது பிகேஆர் தலைவர் அன்வார் தான் என்பதை பெயர் குறிப்பிடாமல் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பெரும்பான்மை இருந்ததாகக் கூறியுருந்தவர் தற்போது அவர் முன்வரவில்லை எனக் கூறினார்.
“நாங்கள் அரசியல்வாதிகள். எங்களுக்கும் சொன்டத் தகவல்கள் உண்டு. என்னைவிட பெரும்பான்மை கொண்டவர் எவரும் இல்லை.”
பெரும்பான்மை மலேசியர்கள் மகியாடீன் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் எனக் கூறியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஆனால், அரசியல் அமைப்புச் சட்டவிதிப்படியே தாம் நடந்து கொண்டதாகவும் மகியாதீன் குறிப்பிட்டார்.
எது எப்படி இருந்தாலும், அரசியல் அமைப்புச் சட்டப்படி பெரும்பான்மை ஆதரவு கொண்டவரை நியமிப்பது மாமன்னரின் முடிவில் இருப்பதாக மகியாதீன் மேலும் சொன்னார்.


