Homeமலேசியாகால்வாய்க்குப் பக்கத்தில் கோவிட்-19 சிகிச்சையா ? – இணையவாசிகள் கண்டனம் !

கால்வாய்க்குப் பக்கத்தில் கோவிட்-19 சிகிச்சையா ? – இணையவாசிகள் கண்டனம் !

ஜோர்ஜ்டவுன் | 17/8/2021 :-

இங்குள்ள புக்கிட் மெர்த்தாஜாம் மருத்துவமனையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு கால்வாய்க்குப் பக்கத்தில் சிகிச்சை நடத்தப்படுவதாக் இரண்டு காணொலிகள் சமூக ஊடகங்களில் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டு வந்துள்ளன. அச்செயல் கண்டு இணையவாசிகள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

கடுமையான மழைக்குப் பிறகு அந்தக் கால்வாயில் நீர் நிரம்பி நடைபாதைக்கு நிழற்குடையடன் கட்டப்பட்டுள்ளப் பகுதியில் வழிந்ததாகவும் அங்கேயே சுவாசப் பிரச்சனை கொண்ட நோயாளிகளுக்கு உயிர்வளி கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிழலுக்கானக் குடை மட்டும் இருந்ததால் சாரல் காற்று நோயாளிகள் மேல் பட்டது.

பினாங்கின் செபெராங் பெராய் மாவட்டத்தில் புக்கிட் மெர்த்தாஜாம் மருத்துவமனை முக்கியானதாகும். கடந்த வாரம் பினாங்கு மாநிலத்திலேயே மிக அதிகமான கோவிட்-19 நேர்வுகளை  பதிவு செய்த மருத்துவமனையாகும். இதனால், பினாங்கிம் மொத்தப் பாதிப்பு நான்கு இலக்க எண்களாக உயர்ந்தது.

புக்கிட் மெர்த்தாஜாம் ஸ்தீவன் சிம் இது குறித்து தெரிவிக்கயில், 100 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த அந்த மருத்துவமனையை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டும் என மக்களவையில் கோரியிருப்பதாகக் கூறினார்.

அதே நேரத்தில், அவசர சிகிச்சைப் பிரிவு வார்டுகளை மேலும் விரிவுபாடுத்த ஒரு நன்கொடையாளர் மருத்துவமனையின் நிர்வாகத்திடம் பேசி இருப்பதாகவும் அதன் மதிப்பு ஏறத்தாழ ரி.ம. 110,000 என அவர்ர் சொன்னார்.

சுவாச உதவிக் கருவிகளுக்காக ரி.ம. 50,000 கொடுத்து உதவிய சிம், அந்த மேம்பாட்டுப் பணி மிக விரைவில் தொடங்கவிருப்பதாகவும் கூறினார்.

spot_img

latest articles

explore more