கோலாலம்பூர் | 18/8/2021 :-
காப்பேற்புப் பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசினிடமிருந்து ‘நற்செய்தி’ ஒன்று வரும் என பெர்சத்துவின் தகவல் பிரிவு தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் தெரிவித்துள்ளார்.
நேற்று உத்துசான் மலேசியாவுக்கு வழங்கிய பேட்டியில், அதனை இன்று மகியாதீனே தெரிவிப்பார் எனவும் தாம் அதனைக் கூறுவது முறாஇயன்று எனவும் தெரிவித்தார்.
இதனை நேரலையாக அறிவிப்பது செய்தி அறிக்கையின் வாயிலாகத் தெரிவிப்பதும் அவரது முடிவில் உள்ளது எனக் கூறிய வான் சைஃபுல், நாம் அனைவரும் அதற்காகக் காத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அந்த நற்செய்து தேசியக் கூட்டணி அரசாங்கத்தைத் தொடர்புடையதாக இருப்பதை மறுக்காத வான் சைஃபுல், அதற்கான முயற்சிகள் அந்தப் பேட்டியின்போது இன்னும் முடிவடையவில்லை எனக் குறிப்பிட்டார்.
நேற்று அம்னோவின் உச்சமன்றம் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை தங்களின் பிரதமர் வேட்பாளராக ஒரு மனதாக முடிவெடுத்தது எனத் தகவல்கள் வெளியாகின.
இதன்படி, 42 அம்னோ – தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமேயானால், 115 பெரும்பான்மை ஆதரவில் மலேசியாவின் அடுத்தப் பிரதமராக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நியமிக்கப்படுவார்.


