Homeஅரசியல்இஸ்மாயில் சப்ரியின் பிரதமர் கனவு முகிதீனின் கையில் உள்ளது ?

இஸ்மாயில் சப்ரியின் பிரதமர் கனவு முகிதீனின் கையில் உள்ளது ?

கோலாலம்பூர் | 18/8/2021 :-

தற்பொழுது மலேசியாவின் 9வது பிரதமரகும் இஸ்மாயில் சப்ரியின் கனவு மெய்ப்படுவது முகிதீன் யாசினின் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த திங்கட்கிழமை பிரதமர் பதவியில் இருந்து முகிதீன் யாசின் விலகினார். அதன் பொருட்டு இஸ்மாயில் சப்ரி அடுக்கப் பதவி உயர்வு பெறுவது தற்போது முகிதீனின் பச்சைக் கொடியியின்றி வாய்ப்பில்லை என ஆருடங்கள் வலுக்கின்றன.

அடுத்தப் பிரதமருக்கான வேட்பாளரை பெர்சத்து இன்னும் முடிவு செய்து அறிவிக்காத நிலையில், தேசிய முன்னணி பாஸ், ஜிபிஎஸ் ஆகியக் கட்சிகளின் கூட்டணியின் ஆதரவு இருந்தும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்குப் பெரும்பான்மை இன்னும் உறுதியாகவில்லை.

தேசியக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என இன்று மாலை முகிதீன் யாசின் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடயே, பெர்சத்து கட்சியில் துணைப் பிரதமருக்கானப் பதவிக்கு ஹம்ஸா ஸைனுடின், அஸ்மின் அலி ஆகியோருக்கிடையிலானப் போட்டி இருந்து வருகிறது எனவும் ஆனால், முகிதீனின் முடிவைத்தான் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என அக்கட்சி சார்ந்த தரப்பிடமிருந்து தகவல் பெற்றதாக எஃப்.எம்.டி. கூறியது.

புதிய அரசாங்கம் இன்னொரு தேசியக் கூட்டணியாக இருக்கக் கூடாது அல்லது இருக்க முடியாது என இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நன்கு அறிந்திருந்தாலும், பிரதமர் ஆவது பெர்சத்துவையும் சார்ந்து இருப்பதை மறுக்கவும் முடியாது.

இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமர் ஆக நியமிக்கப்படும் விவகாரத்தில்  அம்னோ கட்சியின் முடிவை சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எற்காமல் போகலாம் என்பதால் பெர்சத்துவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் அவர் பெற்றாக வேண்டும் என அக்கட்சி சார்ந்த தரப்பு கூறியது.

அதே வேளையில், இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பிரதமர் ஆக நியமிக்கப்படும் விவகாரத்தில் பெர்சத்துவில் உள்ள அனைவருக்கும் உடன்பாடு இல்லை எனவும் சிலர் மட்டுமே அதர்கு உடன்படுவதாக தெரிவித்த அந்த நபர், எப்படி இருந்தாலும் முகிதீனின் முடிவுக்குக் கட்டுப்பாடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more