spot_img
15.7 C
London
spot_img
Home மலேசியா கல்வி தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கு : பொது மக்களின் நன்கொடையை நாடும் மலாய் அமைப்பு

தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கு : பொது மக்களின் நன்கொடையை நாடும் மலாய் அமைப்பு

0
573

கோலாலம்பூர் | 4/1/2021 :-

தாய்மொழிப் பள்ளிகள் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என வழக்கு தொடுத்துள்ள மலாய் அமைப்புகளுக்கு ஆதரவாக Pertubuhan-Pertubuhan Pembela Islam (Pembela) எனும் அமைப்பு அவ்வழக்கு தொடர்பான செலவுகளுக்காகப் பொது மக்களின் நன்கொடையை நாடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த அவ்வமைப்பின் தலைவர் அமினுடின் யாஹயா, இது வரையில் தங்களின் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி வந்ததாகவும் பொது மக்களின் நன்கொடை கிடைத்தால் அவ்வழக்கு தொடர்பான செலவுச் சுமையைக் குறைக்க ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கு இன்னும் பல காலம் தொடர இருப்பதாலும் இன்னும் மேல் நிலை நீதி மன்றம் வரை செல்ல இருப்பதாலும் பெம்பேலா அமைப்போடு இதர அமைப்புகளும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் சொன்னார்.

இவ்வழக்கில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களின் கட்டணம், ஆவணங்கள் தயாரிக்கும் செலவுகள் ஆகியவற்றுக்காகவும் நன்கொடை திரட்டப்படுவதாகவும் அமுனிடின் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அரசியல் சார்ந்த ஊழல் வழக்குகள், மாமன்னரை அவமானப் படுத்தும் வழக்குகள் ஆகியவற்றுக்குப் பொது மக்களின் ஆதரவு பெருமளவும் கிடைக்கின்றது.

ஆகையால், ஒரே வகையிலானப் பள்ளிகளை உருவாக்க வேண்டும் எனும் பெம்பேலாவின் நோக்கத்திற்குப் பொது மக்கள் ஆதரவளிப்பார்கள் என நம்பி இந்த நன்கொடை திரட்டும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமினுடின் சொன்னார்.

மேல்முறையீடு செய்ய நீதிமன்றத்தின் 30 நாட்கள் கால அவகாசம் இருக்கின்ற நிலையில், இந்த வழக்கு குறித்து பொது மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள ஓர் அளவு கோலாக இருக்கும்.

குறைந்தது ரிம 20 நன்கொடையை பெம்பேலா அமைப்பு பொது மக்களிடம் எதிர்ப்பார்க்கிறது.

இது வரையில் சொந்தப் பணத்தில்தான் இவ்வழக்கை நடத்தி வந்திருப்பதால், எவ்வளவு நன்கொடை திரட்டப்பட்டாலும் சமயம், இனம், தாய்நாட்டிற்காக இந்த தாய்மொழி பள்ளிகளுக்கு எதிரானப்ம்போராட்டம் நிச்சயம் தொடரும் என அமுனுடின் சொன்னார்.

தாய்மொழிப் பள்ளிகள் கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை என Ikatan Muslimin Malaysia (ISMA), Gabungan Pelajar Melayu Semenanjung (GPMS), Gabungan Persatuan Penulis Nasional (GAPENA), Majlis Pembangunan Pendidikan Islam Malaysia (MAPPIM) ஆகிய அமைப்புகள் வழக்கு தொடுத்து இருந்தன.

தாய்மொழி பள்ளிகளைத் தற்காக்கும் தரப்பாக மலேசியக் கல்ல்வி அமைச்சர், மலேசியக் கல்வி அமைச்சு, ம.சீ.ச., ம.இ.கா., கெராக்கான், டோங் ஸோங், கோலாலம்பூர் சோங் ஹ்வா தனியார் இடையிலைப் பள்ளி ஆகியவை களமிறங்கியுள்ளன.

அவற்றோடு, பேரா மாநிலத் தமிழர் திருநாள் இயக்கம், மலேசியத் தம்மிழர் சங்கம், பணி ஓய்வு பெற்றத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் நலச் சங்கம், சீன மொழிக் காப்பகம் ஆகியவையும் தமிழ் – சீனப் பள்ளிகளைத் தற்காக்க இணைந்துள்ளன.