பகாங் ,மென்தகாப்பைச் சேர்ந்த அன்பழகன் தேவர் த/பெ தேவராஜா. 2012 முதல் சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அவரை அங்கீகரித்து பகாங் மாநில அளவிலான 2022 காண தேசிய பெர்டான பெலியா விருது வழங்கப்பட்டது.
இந்த விருது அவருக்கு மேலும் ஊக்குவிப்பாக அமைந்துள்ளதாக மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் உதவித்தலைவரும் பகாங் மாநில மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவருமான அன்பழகன் தேவர் தெரிவித்தார்.
மேலும் பகாங் மாநில அளவிலான 2022-ஆம் ஆண்டுக்காண தேசிய பெர்டான பெலியா விருதை வென்ற ஒரே இந்தியரும் இவரே ஆவார். இளைஞர்கள் இதுபோன்று அரசாங்கம் நடத்தி வரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முனைப்பு காட்ட வேண்டும் என்று தேசியப் பள்ளி ஆசிரியரான அவர் தெரிவித்திருந்தார்.


