spot_img
10.9 C
London
spot_img
Home மலேசியா கல்வி தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்து கலைக்களஞ்சியங்கள் அன்பளிப்பு!

தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்து கலைக்களஞ்சியங்கள் அன்பளிப்பு!

0
354

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2-

மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் ஸ்தாபகர் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் ஆசியோடு இந்து சமய கருத்தரங்கமும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் திருக்கோவில்களுக்கும் இந்து கலைக்களஞ்சியங்களை இலவசமாக வழங்கும் பெருவிழா இன்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

உலக வரலாற்றுப் பதிவாக 4,200 பக்கங்களில் அமைந்த இந்து கலைக்களஞ்சிய நூல்கள் 25 தமிழ்ப்பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

தவத்திரு பாலயோகி சுவாமிகள் மேற்கொண்ட அயராத முயற்சியின் பலனாக இந்த கலைக்களஞ்சிய நூல்கள் வெளிவந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று திருப்பிடத்தின் பொதுச் செயலாளர் கண்ணா குறிப்பிட்டார்.

இந்த கலைக்களஞ்சிய நூல்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மொழி வளர்ச்சிக்கும் சமய அறிவு மேம்பாட்டிற்கும் மிகவும் பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா நாட்டின் சட்டத்துறை அறிஞர், உலகளவிய தமிழ் இலக்கிய, பக்தி இலக்கிய துறைகளின் ஆய்வாளர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியத்தின் தொடக்க உரையுடனும் கண்ணாவின் வரவேற்புரையுடனும் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதில் டான்ஸ்ரீ குமரன், பேராசிரியர் முனைவர் என்.எஸ். இராஜேந்திரன், மக்கள் சக்தி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன், முனைவர் திலகவதி, தவத்திரு பாலயோகி சுவாமிகள், முனைவர் பாலகிருஷ்ணன், உயர்திரு சுப்பிரமணி ஆகியோரோடு தவத்திரு பாலயோகி சுவாமிகளின் உரையும் இடம் பெற்றன.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு சிறப்பு வருகை புரிந்து இந்து கலைக்களஞ்சிய நூல்களை தமிழ்ப்பள்ளிகள், திருக்கோவில்கள் மற்றும் இயக்கங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களிடம் வழங்கினார் .