spot_img
10.4 C
London
spot_img
Home மலேசியா அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்திற்கு தீர்வு காண அமைச்சர் ஸ்டீவன் சிம் கடும் முயற்சி! -டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்...

அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்திற்கு தீர்வு காண அமைச்சர் ஸ்டீவன் சிம் கடும் முயற்சி! -டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தகவல்

0
595

கோலாலம்பூர், மே 8-

இந்திய பாரம்பரிய தொழிற்துறைகள் எதிர்நோக்கும் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை தொடர்பில் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோருடன் சந்திப்பு ஒன்றை நடத்தியது.

இச்சந்திப்பில் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் நாராயணசாமி தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்க சம்மேளனம், நிர்வாகத் தரப்புகள், மலேசிய இந்திய ஜவுளியக துறை மற்றும் பொது கிடங்கு சங்கம், மலேசிய இந்திய பொற்கொல்லர்கள் சங்கம் , மலேசிய இந்திய சிகை அலங்கார உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நிவாஸ் ராகவன் தலைமையிலான கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் ஆகியவை பங்கேற்றன.

அந்நிய தொழிலாளர்களுக்கான அங்கீகாரம் பெறுவதில் தத்தம் துறையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோருடன் மேற்கண்ட சங்கங்கள் மற்றும் துறைகளின் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் மிக முக்கியமாக, கடந்தாண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரித்த 7,500 அந்நிய தொழிலாளர்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது. மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் இது குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.

“இவ்விவகாரம் தொடர்பில் கடந்த 5 மாத காலமாக முயற்சி மேற்கொண்ட ஸ்டீவன் சிம்மிற்கு நாங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதில் இவரின் மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு முக்கிய பங்களித்துள்ளன. இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண்பதில் அவர் காட்டிய அக்கறையை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம். இந்திய வர்த்தகச் சமூகத்தை மேம்படுத்துவதில் தூரநோக்கு இலக்கைக் கொண்ட அவரின் தலைமைத்துவம் மற்றும் உறுதிப்பாடு பாரட்டப்பட வேண்டியது மட்டுமின்றி மதிக்கப்படவும் வேண்டும்” என்றார் கோபாலகிருஷ்ணன்.

அதே வேளையில், அமைச்சரவை உறுப்பினர்களிடையே இவ்விவகாரத்தை விவாதித்த டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அணுகுமுறை மற்றும் உளப்பூர்வ முயற்சியும் பாராட்டுக்குரியது என்றார்.

“இந்திய வர்த்தக சமூகத்தின் சுபிட்சம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை ஊக்குவிப்பதில் சம்மேளனம் உறுதியாக உள்ளது. இந்த கலந்துரையாடல் அனைத்து தரப்பினருடனான ஒத்துழைப்பை அதிகரித்து அனைவரும் ஒன்றிணைந்து பயனடைவதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் மேலும் சொன்னார்.