spot_img
14 C
London
spot_img
Home மலேசியா பேங்க் ராக்யாட் இந்திய தொழில்முனைவர் நிதி திட்டம்: இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் வரவேற்பு!

பேங்க் ராக்யாட் இந்திய தொழில்முனைவர் நிதி திட்டம்: இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் வரவேற்பு!

0
390

கோலாலம்பூர், ஜூன் 6-

இந்திய தொழில்முனைவர் சமூகம், குறிப்பாக மைக்ரோ, சிறு, நடுத்தர தொழில்முனைவர்களை வலுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட பேங்க் ராக்யாட் இந்திய தொழில்முனைவர் நிதி (பிரீஃப்-ஐ) திட்டத்தை மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் வரவேற்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் நாராயணசாமி தெரிவித்தார்.

பிரீஃப்-ஐ எனும் இத்திட்டத்தின் வாயிலாக பேங்க் ராக்யாட் 50 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டம் தொழில் மூலதனம் மற்றும் செலவு மூலதனம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்திய தொழில்முனைவர்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதோடு பொருளாதார நிலைத்தன்மையைப் பெறுவதற்காகவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாக நிர்வகிக்கப்படுவதை தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சு கண்காணிக்கும் என்றார் அவர்.

இதன் அறிமுக விழாவில் உரையாற்றிய போது இந்நிதித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் வலியுறுத்தினார்.

அதே சமயம், பேங்க் ராக்யாட்டின் இந்த முயற்சியானது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசியா மடானி அரசாங்கத்தின் ஆயுள் கால நிதியாகத் திகழ்வதோடு அனைத்து மலேசியர்களின் மேம்பாடு மற்றும் வளத்தையும் பிரதிபலிக்கிறது என்று கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.