spot_img
7.1 C
London
spot_img
Home மலேசியா தெக்குன், பேங்க் ராக்யாட் கடனுதவி திட்டங்கள் வழி 500 இந்திய வர்த்தகர்களுக்கு வழிகாட்ட இலக்கு! -நிவாஸ்...

தெக்குன், பேங்க் ராக்யாட் கடனுதவி திட்டங்கள் வழி 500 இந்திய வர்த்தகர்களுக்கு வழிகாட்ட இலக்கு! -நிவாஸ் ராகவன்

0
223

கோலாலம்பூர், ஜூன் 13-

தெக்குன் இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட அரசாங்க கடனுதவி திட்டங்கள் வாயிலாக இவ்வாண்டு 500 இந்தியர்களை வர்த்தகத்தில் உயர்த்த கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கம் இலக்கு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியர்களுக்காக பேங்க் ராக்யாட் பிரீஃப் எனும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வெள்ளி வரை கடனுதவி வசதியை ஏற்படுத்தித் தந்திருப்பதை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் சுட்டிக் காட்டினார்

இந்த கடனுதவி திட்டங்கள் வாயிலாக இவ்வாண்டு 500 இந்தியர்களுக்குக் கடனுதவி பெற்றுத் தந்து அவர்களை வர்த்தகத்தில் முன்னேற்ற இலக்குக் கொண்டிருப்பதாக நிவாஸ் கூறினார்.

இந்த கடனுதவி திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது, சிட்டோஸ் போன்ற பிரச்சனையை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு எப்படி உதவுவது போன்றவற்றைத் தெளிவுப்படுத்துவதற்காக இன்று தலைநகரில் விளக்கக்கூட்டம் ஒன்றைத் தாங்கள் நடத்தியதாகவும் அவர் சொன்னார்.

இந்த கடனுதவி திட்டங்களோடு எஸ்எம்இ போன்ற வங்கிகள் வழங்கும் மானியம் போன்றவற்றைப் பெறுவதற்கு எவ்வாறு தங்களைத் தயார்படுத்துவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இங்குள்ள சிலாங்கூர் ராயல் கிளப்பில் நடைபெற்ற இந்த விளக்கமளிப்பு கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கடனுதவி பெறுவதற்கு இப்போது தயார் நிலையில் இல்லாதவர்களை அடுத்த 6 மாதங்களில் தயார்படுத்தி அவர்களைக் கடனுதவி பெறச் செய்வதே தங்களின் முக்கிய இலக்காகும் என்றும் அவர் சொன்னார்.

இதனை தொடர்ந்து, வர்த்தகத் துறையில் ஈடுபட்ட பெண்களை அடுத்தக் கட்ட இலக்கை நோக்கிப் பயணிப்பதற்குச் சங்கம் இயன்ற வழிகாட்டியை வழங்கும் என்றார் நிவாஸ்.