Homeஅரசியல்தைரியமிருந்தால் அம்னோ அமைச்சர்களை நீக்குங்கள்!

தைரியமிருந்தால் அம்னோ அமைச்சர்களை நீக்குங்கள்!

கோலாலம்பூர்:

கொள்கை ரீதியாக சவால்கள் விடுக்கப்பட்டால், அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை.

தைரியமிருந்தால் அம்னோவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் நீக்கிப் பார்க்குமாறு சவால் விடுத்த அம்னோ இளைஞர் அணித் தலைவர் டத்தோ டாக்டர் அக்மால் சாலே,

பதவிகளை இழந்தாலும் ஒருபோதும் கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.

பதவிகளை இழந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒருபோதும் கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று அம்னோவின் 80-வது ஆண்டு மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

 

spot_img

latest articles

explore more