Homeமலேசியாதற்கொலைக்கு கடன் பிரச்னை காரணமா?

தற்கொலைக்கு கடன் பிரச்னை காரணமா?

சுங்கைப்பட்டாணி, நவ. 20-
கெடா, சுங்கைப்பட்டாணியிலுள்ள பெர்டானா ஹெய்ட்ஸில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துக்கொண்டதற்கு கடன் பிரச்னைதான் காரணம் என்று கூறப்படுகிறது. சிவராம் கிருஷ்ணன் (வயது 49) எனும் ஆடவர் தனது பிள்ளைகளான ஜமுனாஸ்ரீ (வயது 8), சிரன்ராவ் (வயது 5), சசின்ராவ் (வயது 4) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு மேல்மாடியிலுள்ள ஓர் அறையினுள் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

சிவராமின் மனைவி காமினி கடந்த நவம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். அவர் இறந்து இன்றோடு 20 நாள்கள் ஆகின்றது. வர்த்தகரான சிவராம் கடன் பிரச்னையாலும் மன உளைச்சலாளும் இருந்து வந்ததாக நம்பப்படுகின்றது. இன்று காலையிலிருந்து அந்த வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததைத் தொடர்ந்து காமினியின் தாயார் புனிதா (வயது 60) பிற்பகல் மணி 1.30 அளவில் அந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் மேல்மாடியிலுள்ள ஓர் அறையில் மூன்று பிள்ளைகள் இறந்தட் நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர், சிவராம் மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துள்ளதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் சோதணையை மேற்கொண்டதோடு நால்வரின் சடலங்களை பிரேத பரிசோதணைக்காக சுங்கைப்பட்டாணி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தற்கொலை செய்துக்கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

latest articles

explore more