அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பெட்ரோல் நிலையத்தில் கொலை; பி.எம்.டபுள்யூ. காரின் எண் பட்டை போலியானது!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பெட்ரோல் நிலையத்தில் கொலை; பி.எம்.டபுள்யூ. காரின் எண் பட்டை போலியானது!

ஜோகூர்பாரு, டிச. 18-
தாமான் பெலாங்கியிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் 44 வயதுதக்க ஆடவரை கொலை செய்த கும்பல் பயன்படுத்திய பி.எம்.டபுள்யூ. ரகக்காரின் எண் போலியானது என ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹம்மட் காலில் காடீர் முஹம்மட் தெரிவித்தார்.

ஈப்போவிலுள்ள ஒரு காரின் எண்ணை அந்த பி.எம்.டபுள்யூ ரகக்கார் போலியாக பயன்படுத்தியிருப்பது போலீசின் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.

நேற்று இரவு மணி 7.30 அளவில் அந்த இளைஞர் சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்திற்கு வோல்ஸ்வோகன் ரகக்காரில் 20 வயதுதக்க வெளிநாட்டை சேர்ந்த தனது மனைவியுடன் வந்திருந்தார். அவர் அங்கு தனது காரின் டயருக்கு காற்றை செலுத்தி கொண்டிருந்த போது பி.எம்.டபுள்யூ. ரகக்காரில் வந்த நால்வர் அடங்கிய கும்பல் அவரை கத்தியால் குத்தியதோடு காரை ஏற்றி கொன்றது.

இவ்விவகாரத்தில் போலீஸ் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என ஜோகூர் மாநிலத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைவர் டத்தோ அஸ்மான் ஆயூப் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன