கோலாலம்பூர், டிச. 20-
ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோல் விலை 2 காசு ஏறிய வேளையில் டீசல் விலை 3 காசு உயர்ந்தது. கடந்த வாரம் முழுவதும் ரோன் 95 பெட்ரோல் விலை 2.25 காசுக்கு விற்கப்பட்ட நிலையில் ரோன் 97 பெட்ரோல் 2.52 காசுக்கு விற்கப்பட்டது. டீசல் 2.20 காசுக்கு விற்கப்பட்டது.
இன்று நள்ளிரவு தொடங்கி ரோன் 95 பெட்ரோல் 2.27 காசுக்கும் ரோன் 97 பெட்ரோல் 2.54 காசுக்கும் விற்கப்படும். அதேவேளையில், டீசல் 2.23 காசுக்கு விற்கப்படவுள்ளது. இந்த விலைகள் இன்று நள்ளிரவு தொடங்கி டிசம்பர் 27ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.


