Homeவிளையாட்டுரொனால்டோ இல்லாமல் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட்!

ரொனால்டோ இல்லாமல் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட்!

மாட்ரிட், பிப்.22 –

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான ரியல் மாட்ரிட் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. புதன்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 3 – 1 என்ற கோல்களில் லெகானேஸ் அணியை வீழ்த்தியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோப்பா டெல் ரே கிண்ணப் போட்டியில் லெகானேஸ் அணியிடம் தோல்வி கண்ட ரியல் மாட்ரிட் இம்முறை அந்த அணியின் சவாலை சமாளித்து வெற்றி பெற்றுள்ளது. முதல் பாதி ஆட்டத்தில் உனாய் புஸ்தின்சா போட்ட கோலின் மூலம் லெகானேச் அணி 1- 0 என்ற கோலில் முன்னணிக்கு சென்றது.

ரியல் மாட்ரிட்டுக்கு எதிராக மீண்டும் ஓர் அதிரடியைப் படைக்கலாம் என லெகானேஸ் கனவு கொண்டிருந்த வேளையில் லுக்காஸ் வாஸ்குவிஸ், காஸ்மிரோ போட்ட இரண்டு கோல்கள் அந்த அணியின் கனவை சிதைத்தது. இரண்டாம் பாதியில் செர்ஜியோ ராமோஸ் போட்ட கோல், ரியல் மாட்ரிட்டின் வெற்றியை உறுதிச் செய்தது.

இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆறு ஆட்டங்களில் ரியல் மாட்ரிட் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவைக் காட்டிலும் 14 புள்ளிகளில் பின் தங்கியிருந்தாலும், வலென்சியாவை முந்தி பட்டியலில் 3 ஆவது இடத்துக்கு முன்னேறியது.

spot_img

latest articles

explore more