முகப்பு > அரசியல் > முதலில் நாட்டின் மறுமலர்ச்சி; பிறகுதான், அன்வார் இப்ராஹிம் பிரதமர்! வான் அசிஸா
அரசியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

முதலில் நாட்டின் மறுமலர்ச்சி; பிறகுதான், அன்வார் இப்ராஹிம் பிரதமர்! வான் அசிஸா

புத்ராஜெயா, மே 15-
துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது முதன்மை நோக்கமாக இருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கம் சீராக இயங்குவதோடு நாம் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதைத்தான் நாங்கள் விரும்புகின்றோம் என அவர் கூறினார்.

முக்கியமாக மறுமலர்ச்சி நோக்கத்திற்கு நாங்கள் முதலில் முக்கியத்துவம் அளிப்போம் என இன்று செராஸ், புனர்வாழ்வு மருத்துவமனையில் தனது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வான் அசிஸா கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், டத்தோஸ்ரீ அன்வாரை அவசர அவசரமாக பிரதமராக நியமிப்பது அவசியமற்றது. அவர் உடனடியாக பிரதமராக நியமிக்கப்பட மாட்டார். நாங்கள் திட்டமிட்டத்தில் இவையனைத்தும் ஒரு பகுதி மட்டுமே என வான் அசிஸா குறிப்பிட்டார்.

முன்னராக, ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் சிங்கப்பூருக்கு அளித்த நேர்க்காணலில் புத்ராஜெயா ஆலோசனை மன்றத்தின் தலைவர் துன் டாய்ம் ஜைனுடின் அன்வாரை அவசர அவசரமாக பிரதமராக நியமிப்பது விவேகமற்ற செயல் என கூறியிருந்தார். மத்திய தவணையில்தான் துன் மகாதீரிடமிருந்து அதிகார மாற்றம் அன்வாருக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் கூறியிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன