கோலாலம்பூர், செப்.6 –

மாமாக் உணவகங்களிலும் அங்காடி உணவுக் கடைகளிலும் புகைப் பிடிப்பதற்கு எதிரானத் தடை இந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி அமலுக்கு வருகிறது.

திறந்த வெளி உணவகாகள் இந்த ஆண்டு இறுதிக்குள் புகைப் பிடிக்கக் கூடாதப் பகுதிகளாகப் பிரகடனம் செய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என துணை அமைச்சர், டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

அவர் நேற்று மேலவையில் இத்தகவலைக் கூறினார்.

சிகரெட் புகை காரணமாக பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதிமுறையை மீறுவோருக்கு வெ.10,000 அபராதம் அல்லது ஈராண்டுக்கு மேற்போகாத சிறை விதிக்கப்படலாம். ஆட்சேபம் ஏதும் இல்லாவிடில் நாடாளுமன்றக் கட்டடத்திலுள்ள புகைப் பிடிக்கும் அறையை அக்டோபரில் மூடுவதற்கும் அமைச்சு வழி வகுக்கும் என்றார் அவர்.