வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டோல் உயர்வு இல்லை குவான் எங்! – லிம் குவான் எங்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

டோல் உயர்வு இல்லை குவான் எங்! – லிம் குவான் எங்

பெட்டாலிங் ஜெயா, டிச. 27-

வரும் ஜனவரி தொடங்கி அனைத்து நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டண உயர்வு இல்லை என்று நிதியமைச்சர், லிம் குவான் எங் தெரிவித்தார்.

இந்த முடிவை அமைச்சரவை கடந்த 12ஆம் தேதி தீர்மானித்ததோடு 2019ஆம் ஆண்டில் அனைத்து 21 நெடுஞ்சாலைகளிலும் டோல் கட்டணத்தை உயர்த்துவதாக இருந்த போதிலும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் அதை முடக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்தது.

இது உண்மையில் 2019 பட்ஜெட் அறிவிப்புக்கான குறிப்பிடத்தக்க ஒரு மேம்பாடாகும். இந்த டோல் கட்டண உயர்வு முடக்கம் 2019இல் நாடு முழுவதும் உள்ள 21 நெடுஞ்சாலைகளுக்கான முழுமையான ஒரு நடவடிக்கை ஆகும்.

இதில் 8 வெவ்வேறு நெடுஞ்சாலைகளில் பேருந்துகளுக்கான டோல் கட்டண முடக்கம், பினாங்கு பாலம் மற்றும் சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா பாலத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கான டோல் முடக்கம், ஜோகூர் 2ஆவது பாதைக்கான நெடுஞ்சாலைக்கானப் பாதையும் அடங்கும். இதற்கு அரசு வெ.99.443 கோடியை செலவிடும்.

இந்த டோல் சாவடிகள் அகற்றும் நடவடிக்கையில் வரும் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி ஆண்டுதோறும் இழப்பீடு வழங்க அரசுக்கு வெ.2 கோடி தேவைப்படுகிறது என்று ஓர் அறிக்கையில் குவான் எங் குறிப்பிட்டார்.

இதில் இதர 8 நெடுஞ்சாலைகளில் வெ.16.8 லட்சம் செலவை உட்படுத்திய பேருந்துகளுக்கான டோல் கட்டண உயர்வை முடக்கவும் அமைச்சரவை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து ஹராப்பான் புத்தகத்தில் அடங்கியுள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான மிகச் சிறந்த அணுகுமுறைகளை அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்த முடக்க நடவடிக்கை உண்மையில் இம்முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று பாகான் தொகுதி எம்.பி.யுமான குவான் எங் மேலும் கூறினார். முன்னதாக ஆட்சி அதிகாரத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கைப்பற்றினால், டோல் அகற்றப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன