திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ட்விட்டரை உலக அளவில் அதிர வைத்த சூப்பர் ஸ்டாரின் பேட்ட !
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ட்விட்டரை உலக அளவில் அதிர வைத்த சூப்பர் ஸ்டாரின் பேட்ட !

சென்னை:

பேட்ட ட்ரெய்லர் ட்விட்டரில் உலக அளவில் 6வது இடத்தில் டிரெண்டாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்த்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 10. 25 மணிக்கு வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது.

ரொம்ப நாள் கழித்து ரஜினியை பழைய மாதிரி பார்த்த ஃபீல் கிடைத்துள்ளது.

பேட்ட ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ள நிலையில் ட்விட்டரில் உலக அளவில் 6வது இடத்திலும், இந்தியா அளவில் முதலிடத்திலும் டிரெண்டாகியுள்ளது. இது தவிர #GetRajinified #SuperstarRajinikanth #PettaPongalParaak ஆகிய ஹேஷ்டேகுகளும் இந்தியா அளவில் டிரெண்டாகியுள்ளன.

பேட்ட பட ட்ரெய்லர் வெளியாகிய 40 நிமிடத்தில் அதை யூடியூபில் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பேட்ட படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்துவிட்டது.

பேட்ட ட்ரெய்லர் :

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன