வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > பாயேர்ன் மூனிக்கில் தொடர்ந்து நீடிக்க லெவென்டோஸ்கி விருப்பம் ????
விளையாட்டு

பாயேர்ன் மூனிக்கில் தொடர்ந்து நீடிக்க லெவென்டோஸ்கி விருப்பம் ????

மூனிக், ஜன.2 –

ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக் கிளப்பின் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் ரோபேர்ட் லெவென்டோஸ்கி அந்த கிளப்பில் தொடர்ந்து நீடிக்க எண்ணம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 30 வயதுடைய லெவென்டோஸ்கி அந்த கிளப்பை விட்டு வெளியேறுவார் என கடந்த கோடைக் காலத்தில் கூறப்பட்டது.

எனினும் பாயேர்ன் மூனிக் பயிற்றுனர் நிக்கோ கோவாக்குடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் தமது முடிவை மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. பாயேர்ன் மூனிக்கிலேயே தமது கால்பந்து வாழ்க்கையை முடித்து கொள்வதற்கான சாத்தியமும் உள்ளதாக லெவென்டோஸ்கி தெரிவித்தார்.

பாயேர்ன் மூனிக்குடனான லெவென்டோஸ்கியின் நடப்பு ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் முடிவடைய விருக்கிறது. ஐரோப்பாவில் இதர கிளப்புகளில் இணைய தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என அவர் மேலும் சொன்னார்.  பாயேர்ன் மூனிக்கில் தற்போது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் லெவென்டோஸ்கி.

இந்த பருவத்தில் மட்டும், பாயேர்ன் மூனிக்குடனான 24 ஆட்டங்களில் 22 கோல்களைப் போட்டிருக்கிறார். 2014 ஆம் ஆண்டில் பொருசியா டார்ட்மூண்டில் இருந்து பாயேர்ன் மூனிக்கில் இணைந்தப் பின்னர் 219 ஆட்டங்களில் 173 கோல்களைப் போட்டிருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன