அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை இடைத்தேர்தல்; வெற்றி தேசிய முன்னணிக்கே -டத்தோஸ்ரீ நஜீப்
அரசியல்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை இடைத்தேர்தல்; வெற்றி தேசிய முன்னணிக்கே -டத்தோஸ்ரீ நஜீப்

கேமரன் மலை, ஜன. 5
இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியே வெற்றி பெறும் என்று முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அக்கட்சியின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதால் மக்கள் தேசிய முன்னணியே வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய முன்னணி சரியான முறையில் செயல்பட்டால் அத்தொகுதியை தற்காத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறினார்.

தேசிய முன்னணி அரசாங்கம் அங்குள்ள பூர்வகுடி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என ஜசெகவின் லிம் கிட் சியாங்கின் கூறியதை நஜீப் மறுத்துள்ளார்.

தேசிய முன்னணி பூர்வகுடி மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளது. இனியும் அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்கு தே.மு நிறைய திட்டங்களை வைத்துள்ளது. எனவே, தேசிய முன்னணி பூர்வகுடி மக்கள் எதுவும் செய்யவில்லை என்பதில் துளியும் உண்மையில்லை என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன