வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கடப்பிதழ் காணாமல் போனால் வெ.300-வெ.1200 வெள்ளி வரை  அபராதம்
சமூகம்மற்றவைமுதன்மைச் செய்திகள்

கடப்பிதழ் காணாமல் போனால் வெ.300-வெ.1200 வெள்ளி வரை  அபராதம்

கோலாலம்பூர், ஜன 5
பயணப் கடப்பிதழை தொலைத்தவர்கள் இனி 300 வெள்ளியிலிருந்து 1200 வெள்ளி வரை அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 20 என தேதியிடப்பட்ட 2019 கடப்பிதழ்-விசா தொடர்பான மத்திய அரசாங்கத்தின் ஆணையில் இந்த அபராத உத்தரவு இடம் பெற்றுள்ளது.

முதல் முறையாக கடப்பிதழை தொலைத்துவிட்டு புதிய கடப்பிதழ் பெறும்போது வெ.400 அபராதம் விதிக்கப்படும். 12 வயதிற்கு கீழ் உள்ள பிள்ளைகள் மற்றும் வெளிநாடுகளில் பயிலும் 21 வயதுடைய மாணவர்களுக்கு வெ.300 அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது முறையாக கடப்பிதழை தொலைத்துவிட்டு புதிய கடப்பிதழ் பெறும்போது வெ.700 விதிக்கப்படும். 12 வயதிற்கு கீழ் உள்ள பிள்ளைகள் மற்றும் வெளிநாடுகளில் பயிலும் 21 வயதுடைய மாணவர்களுக்கு வெ.600 அபராதம் விதிக்கப்படும்.

மூன்றாவது முறையாக கடப்பிதழை தொலைத்துவிட்டு புதிய கடப்பிதழ் பெறும்போது வெ.1,200 விதிக்கப்படும். 12 வயதிற்கு கீழ் உள்ள பிள்ளைகள் மற்றும் வெளிநாடுகளில் பயிலும் 21 வயதுடைய மாணவர்களுக்கு வெ.1,100 அபராதம் விதிக்கப்படும்.

இதற்கு முன்னர் பயணக் கடப்பிதழை தொலைத்தவர்களுக்கு எந்தவொரு அபராதமும் விதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன