ஈப்போ, பிப் 21-
தேசிய வகை தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளியில் அனைத்துலகத் தாய்மொழி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட/தென் கிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் கண்காணிப்பாளர் தவமணி, திரு.செ.பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரிய தலைவர் மதிப்பிற்குரிய டத்தோ ந.மாரிமுத்து அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
திரு.செ. தவமணி அவர்கள் தமதுரையில் தமிழ்மொழி பற்றியும் அதன் சிறப்புத்தன்மையையும் தெளிவாக எடுத்துரைத்தார். டத்தோ ந.மாரிமுத்து அவர்கள், இந்நிகழ்ச்சி பற்றி கூறும்போது, ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் தாய்மொழி தினத்தைக் கொண்டாட வேண்டுமென்றும், இதன்வழி தமிழின் சிறப்புகளை மாணவர்களுக்கு கூறமுடியும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த பள்ளித் தலைமையாசிரியர் திரு.சி.விஜயன் அவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டினார்.