சுங்கை பூலோ:
தீபாவளி பெருநாளை முன்னிட்டு, அமானா இக்தியாரின் கீழ் நாடு முழுவதுமுள்ள வசதி குறைந்த 16,600 பேருக்கு வணக்கம் மடானி தீபாவளி உணவு கூடைகள் வழங்கும் திட்டத்தைத் தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர், டத்தோ ரமணன் இன்று தொடக்கி வைத்தார்.
இத்திட்டம், பொருளாதார சிரமத்தில் இருக்கும் இந்தியக் குடும்பங்கள் தீபாவளிக்குத் தயாராக உதவவும் அவர்களின் சுமையை இலகுபடுத்தும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக 2 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும் துணையமைச்சர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு உணவு கூடையிலும் அரிசி பாக்கெட், எண்ணெய், முறுக்கு மாவு, அதிரசம் மாவு, சியக்காய் தூள், துவரம் பருப்பு, எள் எண்ணெய், பானம் மற்றும் தீபாவளிக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கியுள்ளன.
இன்று முதற்கட்டமாக சுங்கை பூலோவில் 50 குடும்பங்களுக்கு உணவு கூடைகளைத் துணையமைச்சர் ரமணன் வழங்கினார். மொத்தமாக 3000 பேர் சுங்கை பூலோ தொகுதியில் இந்த உணவு கூடைகளைப் பெறவுள்ளனர்
நாட்டின் பல மாநிலங்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் எட்டு லாரிகள் இன்று புறப்பட்டன.
இத்திட்டம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசின் சமூகப் பொறுப்பை மீண்டும் வெளிப்படுத்துகிறது என்று அமானா இக்தியாரின் நிதி பிரிவு துணை இயக்குநர் நீர் ஷரிஷால் மாஷாரின் தெரிவித்தார்.