கோலாலம்பூர் பிப் 28-
இளைஞர்,விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிகை தாக்க முயன்றதாக பாப்பா கோமா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் இணைய பதிவெய்ட்டளறன பாப்பா கோமோ மறுத்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற செமினி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது பாப்பாகோமோ இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது .
அவர் தம் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார். 8,000 வெள்ளி ஜாமீன் தொகையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
வான் முகமட் அஸ்ரி என்ற இயற்பெயரைக் கொண்ட 36 வயதுடைய பாப்பா கோமோ அம்னோ இளைஞர் பிரிவின் நிர்வாக குழு உறுப்பினரும் ஆவார்


