சிரம்பான், பிப்.28-

இம்மாநிலத்தில் கடந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் டிங்கி காய்ச்சலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் இக்காய்ச்சலால் மூவர் உயிரிழந்திருப்பது வேதனை தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் இதே கால கட்டத்தில் டிங்கி காய்ச்சல் கண்டோரின் எண்ணிக்கை 200 விழுக்காடாக அதிகரித்திருப்பதாக மாநில சுகாதார, சுற்றுச்சூழல்,கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் செயற்குழு தலைவர் எஸ்.வீரப்பன் தெரிவித்தார்.

சிரம்பான் மாவட்டத்தில் மட்டும் 80 விழுக்காட்டினர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“மரணமுற்ற மூவரும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட இதர நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இவ்வாண்டு மூவர் இக்காய்ச்சலால் உயிரிழந்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விவகாரம் ஆகும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.