ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > தரமான ஆய்வுக் கட்டுரைப் எழுதுவிக்கும் பயிற்சிப் பட்டறை 2019
சமூகம்முதன்மைச் செய்திகள்

தரமான ஆய்வுக் கட்டுரைப் எழுதுவிக்கும் பயிற்சிப் பட்டறை 2019

கோலாலம்பூர், பிப் 28-

புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் ஆய்வுக் கட்டுரை எழுதுவிக்கும் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.

மொழி, மொழியியல் சமூகவியல் துறைகளில் தரமான ஆய்வுக் கட்டுரைப் படைப்புகளை எழுதுவதே இப்பட்டறையின் முக்கிய நோக்கமாகும். எதிர்வரும் மார்ச் 9, 10 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர், கிரேண்ட் பசிபிக் விடுதி இந்தப் பட்டறை நடைபெறும்.

தரமான மற்றும் பயனுள்ள ஆய்வுக் கட்டுரை எழுதும் வழிகளை இப்பட்டறையின் மூலம் கற்றுக் கொள்ள முடியும். அதோடு, ஆய்வுக் கட்டுரைகளை எவ்வாறு முறையாக வெளியிடுவது போன்ற செய்திகளை இப்பட்டறையில் கலந்து கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகத்தின் தலைவர் மற்றும் பட்டறையின் ஆலோசகர் முனைவர் முனீஸ்வரன் குமார் தெரிவித்தார்.

சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் சரன்ஜிட் கோர் ஸ்வரன் சிங் (PhD) இப்பட்டறையில் பயிற்சி வழங்கவுள்ளார். இவர் இதுவரை 21 உயர்தர ஆய்வுக்கட்டுரைகளை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் கடந்த ஆண்டு இப்பயிற்சிப் பட்டறையை முதன் முறையாக ஏற்பாடு செய்திருந்தது. அதில் பலர்  கலந்துகொண்டு பயன்பெற்று வெற்றிகரமாகத் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருந்தனர்.

இவ்வருடமும் ஆய்வுக் கட்டுரை எழுத ஆர்வம் உள்ளவர்கள், ஆசிரியர்கள், முதுகலை, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் ஆகியோர் கலந்து பயனடைவர் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

இந்தப் பயிற்சிப் பட்டறைக் குறித்த மேல் விவரங்கள் பெறுவதற்கு குமாரி ரீத்தா கிருஷ்ணன் (010-2331493) அல்லது முனைவர் முனீஸ்வரன் குமார் (011-26500184) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம். மேலதிகத் தகவலுக்கும் பதிவுக்கும் talias.org அகப்பக்கத்தையும் வலம் வரலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன