ஈப்போ, மார்ச் 1-

இந்திய மாணவர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கிய 2000 ஏக்கர் நிலத்தை பராமரித்து வரும் பேரா இந்திய மாணவர்கள்  கல்வி அறவாரியத்தில் நடப்பு அரசாங்க பிரதிநிதிகள் இதன் இயக்குனர்கள் குழவில் இடம் பெறவேண்டும் என்று  சமுக அமைப்பு தலைவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர் .

இந்த வாரியத்தில் 9 உறுப்பினர்கள் இயக்குனர்களாக இடம்பெற்றுள்ளனர். இதில் நடப்பு அரசாங்க பிரதிநிதிகள் இடம்பெற வாய்ப்பு வழங்குதின் வழி அரசாங்க உதவிகள் தேவைப்படும் காலங்களில் அது வாரியத்திற்கு பேருதவியாக இருக்கும் என்று சிம்மோரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கிய அந்த நிலத்தில் செம்பனை பயிர் செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் நிதியை கடனாக வழங்கி ஆதரவு அளித்துள்ளதை அவர் பாராட்டினார்  பேசினார்.

இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக இந்ந உதவியை அரசாங்கம் வழங்கியுள்ளது இதனை அரசாங்கத்துடன் இணை சேர்ந்து செயலாக்கம்  மேற்கொள்வதின் மேலும் சிறப்பாக இருக்கும் என்று சிம்பாங் பூலாயைச் சேரந்த ஆர்.சுந்தரராஜூ கூறினார்.

ஒற்றுமையுடன் எந்த காரியத்தைச் செய்தாலும் அது கண்டிப்பாக நல்ல பலனைத் தரும் அந்த வகையில் இந்த 2000 ஏக்கர நில விவகாரம் சுமுகமாக செயல்பட எந்த பேதங்களையும் பாராமல் அதன் வாரியக் குழவில் நடப்பு அரசாங்க பிரதிநிதிகள் இடம் பெறவேண்டும் என்று ஈப்போவைச் சேர்ந்த அருள் ஆறுமுகம் வலியுறுத்தினார்.