புந்தோங்கில் அங்காடி கடைகள் அகற்ற நடவடிக்கை ! – கணேசன் வலியுறுத்து

ஈப்போ மார்ச் 4-

சாலை விரிவாக்க பணிக்காக ஜாலான் சுங்கை பாரியில் உள்ள அங்காடி கடைகளை அகற்ற மாநகர் மன்ற நடவடிக்கை எடுக்க உள்ளது என்ற தகவலை ஈப்போ மாநகர் மன்ற உறுப்புனர் ஆ. கணேசன் தெரிவித்தார் .

அந்த சாலையில் தொடக்க காலத்தில் 13 கடைகள் இருந்ததிற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் இன்று சுமார் 30 கடைகள் இருக்கின்றன என்பதை தெரிவித்த அவர், அனைத்து கடைகளுக்கும் இடத்தை காலி செய்ய மூன்று மாத அவகாசம் வழங்க மாநகர் முடிவு செய்துள்ளது.

கடை உரிமையாளர்கள் அதற்குள் இடத்தை காலி செய்யவேண்டும், இல்லையேல் நீதிமன்ற நடவடிக் கையை மாநகர் மன்றம் மேற்கொள்ளும் என்ற தகவலைத் தெரிவித்தார். இதனிடையே மேலும் தொடர்ந்து பல ஆயிரம் வெள்ளி செலவு செய்து அங்காடி கடைகளை நிர்மாணித்து வருவதை நிறுத்தவேண்டும் என்று ஆலோசனைக் கூறினார்.

புந்தோங்கில் மட்டும் அல்ல இங்கு ஜாலான் மசுவினில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்படவிருக்கும் தகவலையைத் தெரிவித்தார்.

புந்தோங்கில் தொடக்க காலத்திலிருந்து வியபாரம் செய்து வரும் 13 வியாபாரிகளுக்கு புந்தோங் போலீஸ் நிலையத்தின் எதிர்புறம் மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டு திட்டத்தில் கடைகள் வழங்கப்படும் . அங்கு கடைகள் தேவைப்படுபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று கேட்டுக கொண்டார்.