தைப்பிங் சிறார் பாதுகாப்பு இல்ல விவகாரம்: குழம்பங்கள் நீடிக்கிறது!

தைப்பிங் மார்ச் 4-

தற்பொழுது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள இங்குள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

நடப்பு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த 40 பேர் உடனடி அவசரப் கூட்டத்தை நடத்தவேண்டும் என்று கோரிக்கையை சங்கங்களின் பதிவு இலாகாவின்( ஆர் . ஓ. எஸ்) கவனத்திற்கு கொண்டுச் சென்றனர் .

அதன் தொடர்பாக நடத்தப்பட்ட அவரக் கூட்டத்தில் தேர்தல் நடத்த சட்டம் வகை செய்கிறதா? என்ற கேள்வி எழந்தது.
அது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழந்ததைத் தொடர் ந்து விளக்கத்தைப் பெற ஆர். ஓ. எஸ் .சின் கவனத்திற்கு கொண்டுச்செல்ல முடிவு எடுக்கப்பட்டது.

அதன் முடிவை வைத்தே அவசரக் கூட்டத்தில் தேர்தல் நடத்துவதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்தக் கூட்டத்தில் நடப்புத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நான்கு நிர்வாக குழுவினர் பொறுப்புகளிலிருந்து விலகுவதா செய்த முடிவு ஏற்கப்பட்டதா என்பது குறித்து கேள்விக் குறியாக உள்ளது.

அண்மையில் ஒரு மாணவர், இந்த பாதுகாப்பு இல்லத்தில் தாக்கப்பட்ட விவகாரம் சமூக தளங்களில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.