ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > நிறுவன தலைமை செயல் அதிகாரியின் மனைவி, இரு மகன்கள் மீது விரைவில் கொலை குற்றச்சாட்டு
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

நிறுவன தலைமை செயல் அதிகாரியின் மனைவி, இரு மகன்கள் மீது விரைவில் கொலை குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச் 4-

நிறுவனத்தின் தலைமை  செயல் அதிகாரி நஸ்ரின் ஹாசன்  மரணம் தொடர்பில் அவரது மனைவி மற்றும் இரு மகன்களுக்கு எதிராக விரைவில் கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்படவிருக்கிறது.

சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் பாட்சிர் அஹமட் இதனை தெரிவித்தார்.

நஸ்ரினின் மனைவி சமீரா முசாபர், 15 மற்றும் 17 வயதுடைய அவரது இரு பிள்ளைகளுடன் மற்றொரு நபர் மீதும் கொலை குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என அவர் சொன்னார்.

சமீராவும் அவரது இரு பிள்ளைகளும் இன்று காலை 6.45 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படு குற்றவியல் சட்டத்தின் 302 வது விதியின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வருவதற்கு சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் அனுமதி வழங்கியிருப்பதாகவும் பாட்சிர் அஹ்மட் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தமது வீட்டில் நஸ்ரின் இறந்து கிடந்தார். தனது படுக்கை அறையில் கைத்தொலைபேசியில் பேட்டரி வெடித்ததால் ஏற்பட்ட காயத்தினால் அவர் இறந்தார் என கூறப்பட்டது.

எனினும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பெட்ரோல் கசிந்திருந்த அடையாளம் இருந்த காரணத்தினால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நஸ்ரியின் மனைவி, அவரது 2 வளர்ப்புப் பிள்ளைகள்  மற்றும் மற்றொரு நபர் மீதும் விசாரணை நடத்தப்பட்டது.

அதோடு நஸ்ரியின் உடல் மீண்டும் தோண்டப்பட்டு  அந்த உடலில் இரண்டாவது சவப்பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நஸ்ரியின் மனைவி மற்றும் அவரது இரண்டு வளர்ப்புப் பிள்ளைகள் மற்றும் மேலும் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவருவதற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன