கோப்பெங், மார்ச் 5-
இங்கு மணிமன்றம் தோற்றுக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுப் பெறும் வேளையில் தமிழ் இளைஞர் மணிமன்றம் அதன் சொந்தக் கட்டடத்தைப் பெற்றுள்ளது.
சுமார் வெ. 5 லட்சம் செலவில் இந்த கட்டடம் உருவாக உள்ளது. ‘மணிமன்ற இல்லம்’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்தன் அடிக்கல் நாட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது.
கோப்பிசான் பாருவில் உள்ள அதன் சொந்த நிலத்தில் மணிமன்ற இல்லம் உருவாக உள்ளது.

இந்த மன்றம் மல்வேறு சவால்ளைகை எதிர்கொண்டு கடந்த 50 ஆண்டுகள் இந்த வட்டாரத்தில் இந்தியர்களுக்கு சிறந்த முறையில் சேவையை வழங்கி வருகிறது என்று அம்மணிமன்த்தின் தலைவர் எஸ். ஜோன் கென்னடி கூறினார்.
இந்த மண்டபம் எழுப்புவதற்கு இம்மணிமன்றத்தின் மூத்த தலைவர்களான விஸ்வலிங்கம் மற்றும் ஆதித்தியன் ஆகிய இரு வரும் விண்ணப்பம் செய்து கிடத்த நிலத்தை மணிமன்றத்திற்கு அவர்கள வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் மணிமன்றத்தின் சார்பில் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் வழக்கறிஞர் எம். மதியழகன், முனைவர் நாகப்பன், மணிமன்ற தலைவர்கள் , உறுப்பினர்கள் பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.

