புந்தோங் சிவன் ஆலயத்திற்கு அரசு மானியம் வெ.50,000 -சிவநேசன் அறிவிப்பு

0
4

ஈப்போ, மார்ச் 5

இங்கு ஜாலான் சுங்கை பாரி வழியில் உள்ள அருள் மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலய திருப்பணிக்கு 35,000 வெள்ளியை மாநில ஆட்சிக் குழ உறுப்பினர் ஏ. சிவநேசன் அறிவித்தார்.

இதற்கு முன்பு இந்த ஆலயத்திற்கு வெ.15,000 வழங்குவதாக  செய்த அறிவிப்பை நினைவுக் கூர்ந்தார்.

இந்த ஆலயத்தின் திருப்பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

அதன் பணி நிறைப்பெற்றால் இம்மாநிலத்தில் சிறந்தொரு ஆலயமாக இது விளங்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த  திருப்பணிக்கு பொது மக்களும் தொடர்ந்து ஆதரவை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நாட்டில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய இடமாக புந்தோங் விளங்கி வருவதால் இங்குள்ள இந்துக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் நிதி பிரச்சனை எழ வாய்ப்பு இல்லை என்றார்.

இந்த ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த சிவநேசன்  ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக இதில் உரையாற்றிய ஆலயத் தலைவர் தியாகராஜன் ஆலய திருப்பணிக்கு ஆதரவு வழங்கி வரும் பொது மக்களுக்கும். இன்று ஆலயத்திற்கு வருகைப் புரிந்து ஆதரவு வழங்க முன் வந்துள்ள சிவநேசனுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் .