ஈப்போ மார்ச் 6-
தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்விக் கேள்விகளில் சிறந்தவர்களாக உருவாக்க ஆசிரியர்களின் சேவையை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் பாராட்டினார்.
சிறந்த நிலையில் உருவாக்கப்பட்டு வரும் மாணவர்கள் பொது அறிவு ஆற்றல் உள்ளவர்களாகவும் விளங்கச் செய்வதின் வழி அது அவர்களின் திறமை மேலும் வலுப்படுத்தும் என்றார்.
மாநில அரசாங்க செயலகத்திற்கு வருகை புரிந்த சுங்கை சிப்புட் காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாநில அரசாங்கத்திற்கு வருகை புரிந்த இரண்டாவது தமிழ்ப்பள்ளியாக இது விளங்குகிறது.
இங்கு மாணவர்கள் வருவதை வரவேற்பதாகவும் அவர்களுக்கு மேலும் பல பொது விஷயங்களை தெரிந்துக்கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார்.
இந்த நிகழ்வில் காந்தி கலாசாலை தலைமை மாணவர்களுக்கு நியமனச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.