ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > சாம்பியன்ஸ் லீக் – புதிய வரலாறு படைத்தது மென்செஸ்டர் யுனைடெட் !
விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் – புதிய வரலாறு படைத்தது மென்செஸ்டர் யுனைடெட் !

பாரிஸ், மார்ச்.7-

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றில் பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மனை வீழ்த்தி மென்செஸ்டர் யுனைடெட் புதிய வரலாறு படைத்துள்ளது. முதல் கட்ட ஆட்டத்தில் 0 – 2 என்ற கோல்களில் தோல்வி கண்ட மென்செஸ்டர் யுனைடெட் இரண்டாவது ஆட்டத்தில் 3- 1 என்ற கோல்களில் பாரிஸ் செயின் ஜெர்மனைத் தோற்கடித்தது.

இதன் வழி ஆட்டம் ஒட்டு மொத்த கோல் எண்ணிக்கையில் 3 – 3 என்ற நிலையில் இருந்தாலும் , எதிரணியின் இடத்தில் போடப்பட்ட 3 கோல்களின் அடிப்படையில் மென்செஸ்டர் யுனைடெட் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் வரலாற்றில் முதல் ஆட்டத்தில் சொந்த அரங்கில் 2 -0 என்ற கோல்களில் தோல்வி கண்ட எந்த ஓர் அணியும் அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றது கிடையாது. எனினும், மென்செஸ்டர் யுனைடெட் அந்த வரலாற்றை திருத்தி எழுதியுள்ளது.

ஆட்டம் தொடங்கிய 2 ஆவது நிமிடத்தில் ரொமேலு லுக்காகூ, மென்செஸ்டர் யுனைடெட்டின் முதல் கோலை அடித்தார்.எனினும் 10 நிமிடங்களுக்குப் பின்னர் பி.எஸ்.ஜி அணிக்கு ஜூவான் பெர்னாட் ஒரு கோலைப் போட்டதன் வழி அந்த அணி காலிறுதிக்கு தகுதிப் பெறும் நிலையில் இருந்தது.

30 ஆவது நிமிடத்தில் ரொமேலு லுக்காகூ மேலும் ஒரு கோலைப் போட்டு மென்செஸ்டர் யுனைடெட்டின் நிலையை வலுவாக்கினார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் வீடியோ துணை நடுவர் தொழில்நுட்ப உதவியுடன் நடுவர் வழங்கிய பினால்டியை மார்கோஸ் ராஷ்போர்ட் கோலாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. அதேவேளையில் காலிறுதிக்குத் தகுதிப் பெறும் பி.எஸ்.ஜி அணியின் கனவு கலைந்துள்ளது. ஒலே கன்னர் சோல்ஜ்ஸ்கர் இடைக்கால நிர்வாகி பொறுப்பை ஏற்றப் பின்னர் மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து அதிரடி படைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன