புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > மும்பையில் தொடங்க இருக்கும் ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் படம்!
கலை உலகம்

மும்பையில் தொடங்க இருக்கும் ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் படம்!

‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். போலீஸ் கதையில் உருவாகும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். தவிர, வேறு ஒரு முக்கியமான கேரக்டருக்கு கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது படக்குழு.

மார்ச் மாதம் தொடங்குவதாகக் கூறப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் மும்பையில் நடத்த இருக்கிறார்களாம். ‘பாட்ஷா’, ‘காலா’ என ரஜினிக்கும் மும்பையுடன் நல்ல தொடர்பு இருக்கிறது. அதேபோல, முருகதாஸும் பாலிவுட்டில் ‘கஜினி’, ‘அகிரா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தவிர, ‘துப்பாக்கி’ படக்கதையும் மும்பை பின்னணியில்தான் நடக்கும். ஆக, மும்பை பின்னணி, போலீஸ் கதை, ரஜினிகாந்த் – முருகதாஸ் காம்போ என ஒன்றுகூடியிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் அந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன