புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > சோனியா, ராகுல் காந்தி உள்பட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
இந்தியா/ ஈழம்

சோனியா, ராகுல் காந்தி உள்பட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

புது டில்லி, மார்ச்.8 –

இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தேதி, அட்டவணை இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட
முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 15 பேர் கொண்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 11 பேரு ம், குஜராத் மாநிலத்தில் 4 பேரும் அடங்குவர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உபியின் ரேபரேலி தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர் என தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன