ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > யூரோப்பா லீக் – ரென்னிசிடம் மண்ணைக் கவ்வியது அர்செனல் !
விளையாட்டு

யூரோப்பா லீக் – ரென்னிசிடம் மண்ணைக் கவ்வியது அர்செனல் !

ரென்னஸ், மார்ச்.8-

யூரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் அர்செனல், பிரான்சின் ரென்னசிடம் 1 –  3 என்ற கோல்களில் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு தேர்வுப் பெறுவதில் கடும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

16 அணிகளுக்கான சுற்றில் அர்செனல், ரென்னசை எளிதில் வீழ்த்து என கணிக்கப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில், அலெக்ஸ் ஈவோபி முதல் கோலைப் போட்டார்.எனினும் அந்த கோலை தக்க வைத்து கொள்ளத் தவறியுடதுடன் மேலும் சில கோல்களை அடிப்பதில் அர்செனல் தோல்வி கண்டது.

41 ஆவது நிமிடத்தில் அர்செனல் தற்காப்பு ஆட்டக்காரர் சாக்ரிட்டிசுக்கு சிவப்பு அட்டைக் கொடுக்கப்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். 10  ஆட்டக்காரர்களுடன் அர்செனல் விளையாடியதை நன்கு பயன்படுத்திக் கொண்ட ரென்னஸ், 42 ஆவது நிமிடத்தில்  பெஞ்சமின் போரிகோட் மூலம் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் அர்செனல் தற்காப்பு ஆட்டக்காரர் நாச்சோ மொன்ரியல் போட்ட சொந்த கோலால் , ரென்னஸ் 2 – 1 என்ற கோல்களில் முன்னணிக்குச் சென்றது. 88 ஆவது நிமிடத்தில் சார் போட்ட கோல் ரென்னசின் வெற்றியை உறுதிச் செய்தது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அர்செனல் வரும் ஞாயிற்றுக்கிழமை மென்செஸ்டர் யுனைடெட்டை சந்திக்க விருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன