சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > எத்தியோப்பியாவின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது:157 பேர் நிலை என்ன?
உலகம்முதன்மைச் செய்திகள்

எத்தியோப்பியாவின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது:157 பேர் நிலை என்ன?

அடிஸ் அபாபா, மார்ச் 10-

எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி புறப்பட்ட போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது.

அந்த விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது.

எத்தியோப்பியாவின் பிரதமர் அலுவலகம் இந்த விபத்தை உறுதி செய்தது. விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

விமானிகள் மற்றும் பணியாளர்கள் 8 பேரும் 149 பணிகளும் அந்த விமானத்தில் இருந்துள்ளனர். அவர்களின் நிலை குறித்து இன்னும் தகவல் கிடைக்கவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன